Wednesday, April 30, 2008

சுட்டபழமே தான்


தேறுன துட்ட எட்துகினு,
கடையை ஏறக்கட்டிட்டு அதான்பா..
துணிமூட்டை,பாட்டிலுங்கோ அல்லாத்தையும்
எட்துக்கினு வூட்டுக்கு ஒடினான்.
அங்கபோனா, அவன் பொண்டாட்டி குய்யோமுறையோனு
அய்துகினு, கொயந்தயவேற மடிலபோட்டுகினு
கத்தீனுகீறா.
அவன் பேஜாராபூட்டான்.
இன்னாமேனுகேட்டா,
கொயந்தக்கு சீக்காம்..
அதாம்பா ஜுரமாம்..
அவனுக்கு வந்தது பாரு கோவம்.............
கோவத்துல இல்ல,....
நிதானமா,
ஆத்தாளையும்,புள்ளையையும் இஸ்துகினு நேரா.................
நம்ம இங்கிலீஸ் டாக்டராண்ட போனாம்பா.

அம்புட்டுதான்பா....அப்பாலிக்காவரட்டா?

0 Comments: